ரூ.2735 கோடி மதிப்பில் வங்கிகடன் இணைப்புகள் வழங்கும் நிகழ்வு

76பார்த்தது
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 2,735 கோடி மதிப்பிலான வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் நிகழ்வினை (செப்.9) தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பயனாளிகளுக்கு நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு நேரடி நிகழ்வினை பார்வையிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 265 சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 4, 655 உறுப்பினர்களுக்கு, ரூ.28.66 கோடி மதிப்பிலான வங்கி கடன் இணைப்புகள் வழங்கப்பட்டது.

வருவாய்த்துறை சார்பில் மலையாளப்பட்டி மற்றும் ஆலத்தூர் பகுதிகளில் பூமிதான நிலத்தில் வாழும் மக்களின் சுமார் 40 ஆண்டுகால கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் 50 பயனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், 60 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் வழங்கினார்கள். இந்நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி