விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில், 256 இடங்களில் விநாயகர் சிலை அமைத்து போலீஸ் பாதுகாப்புடன் பூஜையில் நடைபெற்று வருகின்றன.
ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி திதி அன்று விநாயகர் சதுர்த்தி விழா விசேஷமாக கொண்டாடப்படுவது வழக்கம், அந்த வகையில் இந்த ஆண்டு பெரம்பலூர் நகர் மற்றும் மாவட்டத்தில், உள்ள, பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் ஆகிய நான்கு தாலுகாக்கள் மற்றும் 121 கிராம ஊராட்சிகள், மற்றும் குக் கிராமங்கள் என மொத்தம் 256 இடங்களில் பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு அவற்றுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன,