விழிப்புணர்வு வாகனத்தினை கலெக்டர் துவக்கி வைத்தார்

63பார்த்தது
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அரசுப்பள்ளிகளின் மாணாக்கர்களுக்கு விளக்கிடும் வகையில் மாவட்ட மகளிர் அதிகார மைய விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் இன்று (05. 09. 2024) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்புக்கென்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது, இதுகுறித்து பொதுமக்களுக்கு விளக்கிடும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில், இத்திட்டங்கள் குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் விழிப்புணர்வு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் சென்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அலுவலர் ஒருவர் விளக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி