பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட அனுக்கூரில் நீர்வளத்துறையின் சார்பில், வேதநதியின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பணையினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், இன்று(செப்.10) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட அனுக்கூர் கிராமத்தில் வேதநதி குறுக்கே ரூ. 3. 43 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணியை செயல்படுத்துவதன் மூலம் எசனை, வடக்குமாதவி, அனுக்கூர் கிராமங்களில் உள்ள திறந்தவெளி சுமார் 60 கிணறுகள் நீர் மட்டம் உயரும். அதன் மூலம் 300 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி அடையும். மேலும் கிராமங்களில் குடிநீர் வசதி மேம்படும்.
இதன் மூலம் இப்பகுதியில் மொத்த உணவு உற்பத்தி சுமார் 200 மெட்ரிக் டன் விளைச்சல் அதிகரிக்கும். இது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். எனவே இத்திட்டம் செயல்படுத்துவது மிகவம் அவசியமாக கருதப்படுகறிது. இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏறத்தாழ 90 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில், மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர் நீர்வளத்துறை செயற்பொறியாளருக்கு உத்தவிட்டுள்ளார்.