பெரம்பலூர் மாவட்டம் அயன்பேரையூர் ஊராட்சியில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் நீர்நிலைகளின் கரை ஓரங்களில் 500 பனை விதைகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் இன்று தொடங்கி வைத்தார்.
இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அயன்பேரையூர் கிராம ஊராட்சியில் உள்ள நீர்நிலைகளின் கரை ஓரங்களில் 500 பனை விதைகள் நடவு செய்யும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது எனவே, பொதுமக்கள் அனைவரும் பனைமரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து பனை மரம் வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரகபகுதிகளில் அரசின் பல்வேறுதிட்டங்கள் மூலம் புணரமைக்கப்படும் ஏரிகுளங்கள் மற்றும் புதிதாகஉருவாக்கப்படும் குளங்களின் கரைகளில் பனை விதைகள் நடப்படதிட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்ததக்கது.
அதனைத்தொடர்ந்நது, அயன்பேரையூர் கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் அகழி அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்து பணியாளர்களின் வருகை பதிவேடு, நிர்வாக அனுமதி பெற்றுள்ள பணியின் திட்ட மதிப்பீடு, பணி தொடங்கப்பட்ட நாட்கள், தற்போது வரை பணி முடிவுற்ற அளவு, பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் உள்ளிட்டவைகளை பதிவேட்டின் மூலம் கணக்கிட்டு ஆய்வு மேற்கொண்டார்.