பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் அயன்பேரையூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 436 பயனாளிகளுக்கு ரூ. 6, 68, 78, 688 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
முன்னதாக அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.