பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட, அருணகிரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 16.55 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் குழந்தைகள் நல மையத்தினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று(செப்.13) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் துறை சார்ந்த அரசு அலுவலக பலர் கலந்து கொண்டனர்.