மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

70பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் , வாலிகண்டபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ராமலிங்கம் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது, இதில், மகளிர் உரிமைத்தொகை, வக்பு வாரியத்தில் உள்ள தங்களது இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும்.

கூடுதலாக நீர்த்தேக்க தொட்டி அமைத்து தடையில்லா குடிநீர் வழங்க வேண்டும், உள்ளிட்ட அத்தியாவசிய கோரிக்கைகளை வலியுறுத்தி 496 மனுக்கள் பெறப்பட்டது. முகாமில் வேப்பந்தட்டை துணை வட்டாட்சியர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வமணி, உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி