வேளாண் விரிவாக்க மையத்திற்கு 9 சென்ட் நிலம் ஒதுக்கீடு!

63பார்த்தது
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் புதிய ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடம் அமைக்க 9 செண்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்திற்கான உத்தரவு நகலை முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ். பி. வேலுமணி, வேளாண் உதவி இயக்குனர் சக்திவேலிடம் நேற்று (செப்.,26) வழங்கினார்.

தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், பெருந்தலைவர் மதுமதி விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற கவுன்சிலர்கள் மாமன்றக் கூட்டத்தில் இந்த 9 செண்ட் நிலம் ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உத்தரவு நகல் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தொண்டாமுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கலாராணி, தொண்டாமுத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் மதுமதி விஜயகுமார் மற்றும் கவுன்சிலர்கள் உட்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி