பாப்பம்மாள் பாட்டிக்கு அமைச்சர் முத்துச்சாமி அஞ்சலி!

51பார்த்தது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் வசித்து வந்த பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள், உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் தேக்கம்பட்டியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திமுகவின் மூத்த உறுப்பினரான பத்மஸ்ரீ பாப்பம்மாள் அவர்களின் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தமிழக அமைச்சர் முத்துசாமி அவர்கள் இன்று நேரில் வருகை புரிந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் முதலமைச்சர் சார்பிலும், அமைச்சர் பெருமக்கள் சார்பிலும் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டார். அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, "பாப்பம்மாள் அவர்கள் 1951 ஆண்டு முதல் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டு பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்தவர். குறிப்பாக ஹிந்தி திணிப்பு போராட்டத்தில் பெரும்பங்காற்றினார் என்று நினைவு கூர்ந்தார். பாப்பம்மாளின் இழப்பு திமுகவிற்கு பேரிழப்பு எனக் கூறிய அமைச்சர் இந்த பகுதியில் அவர் விட்டுச் சென்ற திமுகவின் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம் என உறுதியளித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you