ராமநாதபுரம்: பாம்பனில் 3 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் பாம்பன் கடல் வாழக்கத்தை விட அதிகமான கொந்தளிப்புடன் இருப்பதால் கடற்கரை ஓரத்தில் உள்ள வீடுகள், கட்டிடங்கள், மரங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கரையோரத்தில் வைக்கப்பட்டிருந்த மீன்பிடி வலைகள் மண் அரிப்பு ஏற்பட்டு அலைகள் கடலுக்குள் இழுத்துச் சென்றதாக தெரிவித்தனர். இதனிடையே, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (நவ., 23) உருவாகிறது.