யானைத்தாக்கி உயிரிழந்தவர்களுக்கு நிதி உதவி!

84பார்த்தது
தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அட்டுகல் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்ற கூலி தொழிலாளி கடந்த 13 ஆம் தேதி அதிகாலை இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில், அப்பகுதியில் இருட்டில் நின்றுகொண்டிருந்த யானை தீடீரென தாக்கியதில் பலத்த காயங்களுடன் உயிரிழந்தார். உயிரிழந்த தேவராஜின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிதி உதவிஅதேபோல், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விராலியூர் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் கார்த்திக், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனத்துறையினருடன் இணைந்து ஊருக்குள் புகுந்த காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்தார். அப்போது எதிர்பாராத விதமாக யானை கார்த்திக்கைத் தாக்கத் துவங்கியது. இதில் படுகாயமடைந்த கார்த்திக் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மகனை இழந்து வாழும் அவரது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்த எஸ். பி. வேலுமணி நேற்று அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து நிதி உதவியையும் வழங்கினார். வழங்கினார் எஸ். பி. வேலுமணி.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி