சிங்காநல்லூர் - Singanallur

நீலாம்பூர்: 36 ஆவது நாள் விவசாயிகள் போராட்டம்

கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் சங்கம் சார்பில் விவசாயிகள், பாமாயிலை தடை செய்துவிட்டு தேங்காய் எண்ணெயை விநியோகிக்க வேண்டும் என 100 ரேஷன் கடைகளில் 100 நாள் தொடர் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் நீலம்பூர் ரேஷன் கடை முன்பு 100 நாள் 100 ரேஷன் கடை போராட்டத்தில் நேற்று(நவம்பர் 20) 36 ஆம் நாளாக பாமாயிலை தடை செய்துவிட்டு ரேஷன் கடைகளிலும், சத்துணவுக் கூடங்களிலும் தேங்காய் எண்ணெய் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் மாநிலத் தலைவர் ஏ கே. சண்முகம், அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர். மயில்சாமி, அகில இந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் மற்றும் நந்தகுமார், மாதப்பூர் யோகம் மற்றும் நீலம்பூர் விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా