கோவை கள்ளிமடை நடுவீதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி முத்துமணி (35). இவர் நேற்று தனது தோழியுடன் சிங்கானல்லூர் குளத்தேரி பின்புறம் உள்ள மாரியம்மன் கோவில் அருகே நடைபயிற்சி சென்றார்.
அப்போது அங்கு ஒரே பைக்கில் வந்த மூன்று பேர் முத்துமணியின் அருகே சென்று அவரது கழுத்தில் இருந்த ஒரு பவுன், 6 கிராம் தங்க நகையை பறித்தனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முத்துமணி மற்றும் அவரது தோழி சத்தம் போட்டனர். அவர்களின் சத்தத்தைக் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து பைக்கில் தப்பிச் சென்றனர். முத்துமணி கொடுத்த புகாரின் பேரில் சிங்கானல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து நகையை பறித்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.