அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பயன் உரிய முறையில் மக்களை சென்றடைகிறதா என உறுதி செய்வதற்காக "நீங்கள் நலமா?" திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆய்வின்போது பொதுமக்களுடன், முதலமைச்சர் தொலைபேசியில் உரையாட இருக்கிறார். மகளிர் விடியல் பயணம், காலை உணவு, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யவுள்ளார்.