தருமபுரி பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளப்பட்டி பகுதியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் சாந்தி, திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வீடு வழங்கும் திட்டத்தில் பல்வேறு குறைகளை பொதுமக்கள் கூறியுள்ளனர். ஊராட்சி மன்ற செயலாளர் தங்கள் பகுதிக்கு வந்ததே இல்லை என குற்றம் சாட்டினர். இதனால், கடுப்பான ஆட்சியர், “இது உன் அப்பன் வீட்டு பணமா?. உடனடியாக பிரச்சனைகளை முடியுங்கள்” என அதிகாரிகளிடம் காரசாரமாக நடந்துகொண்டார்.