திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே உள்ள புதுப்பேட்டை கிராமத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிகாஷ் ரவி தாஸ் குடும்பத்தோடு வசித்து வந்தார். இந்நிலையில், பிகாஷின் மகள் நந்தினி தாஸ்(16 வயது) கடந்த 14ஆம் தேதி வீட்டில் சோறு வடிக்கும்போது கொதிக்கும் வடிகஞ்சி அவரது உடலில் கொட்டியதில் பலத்த காயமடைந்தார். தொடர்ந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நந்தினி சிகிச்சை பலனின்றி நேற்று(நவ.20) உயிரிழந்தார். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.