சென்னை அடையாறு பணிமனையில் மெக்கானிக்காக உள்ள குணசேகரன் என்பவர் மதுபோதையில், அரசு மாநகரப் பேருந்தை இயக்கியுள்ளார். அப்போது, அடையாறு காவல்நிலைய சுற்றுச் சுவரில் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். தொடர்ந்து, ஓட்டுநர் குணசேகரனை பிடித்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில், கடந்த 10 நாட்களாக பணி வழங்காததால், ஆத்திரத்தில் பேருந்தை எடுத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து, குணசேகரனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.