நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சிக்கல் சிங்காரவேலர் திருக்கோயில். அசுரனை வதம் செய்ய அவதரித்த முருகனுக்கு அம்பிகை வேல் கொடுத்த தலம் என்பதால் இதற்கு பெரும் சிறப்பு உண்டு. கந்த சஷ்டிக்கு முதல் நாள் வேல் வாங்கும் விழா இத்தலத்தில் நடைபெறும். அம்பாளிடம் வேல் வாங்கி வரும் போது சிங்காரவேலனின் திருமுகத்தில் முத்து முத்தாக வியர்வை துளிகள் வெளிப்படுவது ஆன்மிக அதிசயங்களில் ஒன்று.