கோத்தகிரி: வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வு
நீலகிரி மாவட்ட கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் பல்வேறு முறைகேடு நடப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் வந்தது. தொடர்ந்து திடீரென வட்டாட்சியர் அலுவலகத்தில் உதகை லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் பரிமளா தேவி தலைமையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் வட்டாட்சியர் கோமதி கணக்கில் பட்டா சிட்டா பெயர் சேர்த்தல் , சால்வன்ஸ் சான்றிதழ் என பல்வேறு சான்றிதழ்கள் ஜி பே கணக்கின் மூலமாக பணம் பரிவர்த்தனை சுமார் 6 லட்சத்திற்கு மேல் லஞ்சமாக பணம் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.