உதகையில் கொட்டி தீர்த்து வரும் சாரல் மழை

63பார்த்தது
சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்திற்கு மிக மற்றும் கனமழை இருக்கும் என்று எச்சரிக்கை விடுதிருந்த நிலையில் இன்று (அக்.,15) காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் மதியத்திற்கு மேலாக உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வெளியே வராமல் தங்கும் விடுதியிலேயே முடங்கி உள்ளனர். தற்பொழுது சாரல் மழையானது சிறிது சிறிதாக பரவலாக நல்ல மழை பெய்ய துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி