நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வண்டிச்சோலை பகுதியை சேர்ந்தவர் ராஜா ( வயது 41) கூலி வேலை செய்து வரும் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. மேலும் கருத்து வேறுபாடு காரணமாக இவனது மனைவி பிரிந்து சென்றதைத் தொடர்ந்து இவர்களுக்குப் பிறந்த இரு பெண் குழந்தைகளும் தந்தையின் பராமரிப்பில் இருந்து உள்ளனர். இந்நிலையில் கடந்த 2022 ம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நிறைமாத கர்ப்பத்துடன் அவருடைய மூத்த பெண் குன்னூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன்னை ஒருவர் ஏமாற்றி விட்டதாக கூறி புகார் அளித்துள்ளார். அதன் பேரில் மகளிர் காவல் துறை ஆய்வாளர் கோமதி விசாரணை மேற்கொண்ட போது ராணுவ வீரர் ஒருவரிடம் தொடர்பில் இருந்ததாக அந்தப் பெண் கூறியதைத் தொடர்ந்து DNA சோதனை மேற்கொண்டதில் இது பொய்யான தகவல் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2023. ம் ஆண்டு மார்ச் மாதம் 24 ம் தேதி காவல் ஆய்வாளர் கோமதி வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து