நீலகிரி: தொடர் மழையால் அதிர்ஷ்டவசமாக தப்பித்த குடியிருப்பு வாசிகள்
விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் வீடுகள் மீது மண் சரிவால் ஏற்பட்டது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடியிருப்பு வாசிகள். சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை இருக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கொட்டிய கனமழையால் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதனிடையே கோத்தகிரியில் இருந்து உதகை மற்றும் குன்னூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணாபுத்தூர் பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் வீடுகள் மீது மண் சரிவு ஏற்பட்டுள்ளது மேலும் சாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் லாரி மீது மன்சார்வு ஏற்பட்டும் மரங்கள் விழுந்து சேதமடைந்தது ஐந்திற்கும் மேற்பட்ட வீடுகள் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர் மேலும் அதிர்ஷ்டவசமாக குடியிருப்பு வாசிகள் உயிர்தப்பினர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மழையின் காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வீடுகளில் ஏற்பட்டுள்ள விரிசல்களை உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்