கோயம்புத்தூர் - Coimbatore

காரமடை: மானிய விலையில் சோளம் விதைகள்

காரமடை: மானிய விலையில் சோளம் விதைகள்

காரமடை மற்றும் மேட்டுப்பாளையம் வேளாண் விரிவாக்க மையங்களில் சோளம் சி. ஓ. 32 மற்றும் கே. 12 ரக விதைகள் மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து, காரமடை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி இன்று (அக்.,18) கூறியிருப்பதாவது, ஆடி மற்றும் புரட்டாசி பட்டத்தில் சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது, பருவ மழை நன்கு பெய்துள்ளதால், சோளம் சாகுபடி செய்ய இது ஏற்ற தருணம் ஆகும். காரமடை மற்றும் மேட்டுப்பாளையம் வேளாண் விரிவாக்க மையங்களில், சோளம் சி. ஓ. 32 மற்றும் கே. 12 ரக விதைகள் மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ரகங்களை அனைத்து பருவங்களிலும் சாகுபடி செய்யலாம். 95 முதல் 100 நாட்களுக்குள் அறுவடை செய்யலாம். சோளம் விதைகளுக்கு, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், ஒரு கிலோ விதைக்கு ரூ. 30 மானியம் வழங்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் திட்டத்தின் கீழ் சோளம் சாகுபடிக்கு பொது விவசாயிக்கு, ஒரு எக்டருக்கு ரூ. 1500ம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு ஒரு எக்டருக்கு ரூ. 2100ம் மானியமாக வழங்கப்படுகிறது. விவசாயிகள் வேளாண் விரிவாக்க மையம் மற்றும் அலுவலகங்களை அணுகி இத்திட்டங்கள் தொடர்பாக பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வீடியோஸ்


கோயம்புத்தூர்
கண்ணியம் குறித்து பாடமெடுக்க தேவையில்லை!
Oct 18, 2024, 16:10 IST/

கண்ணியம் குறித்து பாடமெடுக்க தேவையில்லை!

Oct 18, 2024, 16:10 IST
யாரும் புண்பட்டுவிடக்கூடாது என்பது திராவிடம். மற்றோரைப் புண்படுத்தி மகிழ்வது ஆரியம். இதற்கு மேலும் ஓர் உதாரணமே தமிழ்தாய் வாழ்த்தில் திராவிடம் தவிர்க்கப்பட்டது. சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது. வரிகளை நீக்கினால் ‘திராவிடம்’ வீழாது. இதைப் புரிந்து கொள்ளாத ஆரியநர், அண்ணா வழியில் நடைபோடும் நம் தலைவர் அவர்களுக்கு, ‘கண்ணியம்’ குறித்துப் பாடமெடுக்கத் தேவையில்லை. ஒருமைப்பாட்டுக்கு உலைவைக்க நினைக்கும் அவரை, ஒன்றிய அரசு உடனேத் திரும்பப்பெற வேண்டும் என துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.