மழை நீரோடு கலந்த சாக்கடை நீர் - மக்கள் அவதி!
கடந்த இரண்டு நாட்களாக கொட்டி தீர்த்த கனமழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் இன்று மாலை கோவையில் கனமழை வெளுத்து வாங்கியது, இந்நிலையில் குறிச்சி பிரிவிலிருந்து போத்தனூர் ரயில் நிலையம் செல்லும் சாலை - எக்ஸாக்ட்லி லட்சுமி கல்யாண மண்டபம் எதிரில் மாலை பெய்த மழையால் டிரைனேஜ் தண்ணீருடன் மழை தண்ணீர் கலந்து சாலையில் தண்ணீர் தேங்கி ஓடுவதால் துர்நாற்றத்தினாலும், டிரைனேஜ் அசுத்த நீரினாலும் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பகுதியில் உள்ள சாலையோர கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதை சரி செய்ய மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.