கோயம்புத்தூர் - Coimbatore

பெண் விமானி பாலியல் வன்புணர்வு; இன்ஜினியர் மீது வழக்கு

பெண் விமானி பாலியல் வன்புணர்வு; இன்ஜினியர் மீது வழக்கு

கோவையைச் சேர்ந்த 35 வயது பெண் பிரபல விமான நிறுவனத்தில் விமானியாக பணிபுரிந்து வந்தார். பின் ராஜினாமா செய்தார். இவருக்கும் அவினாசி சாலையில் உள்ள பயனீர் அபார்ட்மென்ட்டில் வசிக்கும் சிவில் இன்ஜினியர் ஆனந்தராஜு (37)என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, இருவரும் நெருக்கமாக பழகினர். கடந்த ஜூலையில் ஆனந்தராஜ் அந்த பெண்ணை தன் வீட்டுக்கு கூட்டிச் சென்று திருமணம் செய்வதாக உறுதியளித்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். அதை மொபைல் போனில் வீடியோவும் எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. திருமணம் செய்து கொள்ளும்படி அந்த பெண், ஆனந்தராஜு-டம் கேட்டபோது அவர் மறுத்ததோடு ஆபாச வீடியோவை காட்டி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார் என கூறப்படுகிறது. இது குறித்து நேற்று (செப்.,27) முன்னாள் பெண் விமானி மத்திய மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்கின்றனர்.

வீடியோஸ்


கோயம்புத்தூர்
Sep 28, 2024, 13:09 IST/வால்பாறை
வால்பாறை

பத்மஸ்ரீ பாப்பம்மாள் மறைவு- வானதி சீனிவாசன் அஞ்சலி!

Sep 28, 2024, 13:09 IST
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பத்மஸ்ரீ பாப்பம்மாள் நேற்று இரவு உடல்நலக் குறைவு காரணமாக தனது வீட்டில் உயிரிழந்தார். 108 வயது வரை தொடர்ந்து இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வந்த பாப்பம்மாளுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்திருந்தது. பாப்பம்மாளின் உடல் அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், பாப்பம்மாளின் குடும்ப உறுப்பினர்களிடம் ஆறுதல் கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன் பாப்பம்மாள் பெண்களின் அடையாளமாகவும், கோவையின் அடையாளமாகவும் திகழ்ந்தவர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மதிப்புக்குரியவராக இருந்தார். பிரதமர் அவரைச் சந்திக்கும் போதெல்லாம் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவார் என்று கூறினார். பாப்பம்மாளின் ஆத்மா சாந்தியடைய பாஜக சார்பில் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.