எலி மருந்தால் 2 குழந்தைகள் பலி: தனியார் ஊழியர் கைது
சென்னை குன்றத்தூரில் எலி மருந்து காரணமாக 2 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் வீட்டில் எலி மருந்து அடித்த Pest Control நிறுவனத்தின் ஊழியர் தினகரன் கைது செய்துபட்டுள்ளார். மேலும், மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், உரிமையாளர் உள்பட இருவரை தேடி வருகின்றனர். கிரிதரன் என்பவர் வீட்டில் எலி மருந்து அடிக்கப்பட்ட நிலையில் குழந்தைகள் இருவர் உயிரிழந்தனர். கணவன், மனைவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.