ஆஸ்திரேலியாவில் இந்திய அணி பயிற்சி செய்யும் இடத்தை திரை போட்டு மறைத்திருப்பது, இந்திய வீரர்களுக்கு பலன் தராது என ஆஸி.. முன்னாள் வீரர் இயன் ஹேலி கருத்து தெரிவித்துள்ளார். இதனால் ஆஸியின் கள சூழலை தெரிந்து கொள்ளும் வாய்ப்பை இந்தியா தவறவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், இது வெளிநாடுகளுக்குச் செல்லும் போது ஆஸி., அணி கையாளும் யுக்தி எனவும், இந்த முறை எப்போதும், யாருக்கும் கை கொடுக்காது என தெரிவித்துள்ளார்.