துணிக்கடைகளில் இருக்கும் பொம்மைகளுக்கு பதிலாக, பெண்களுக்கு ஆடை அணிவித்து அவர்களை Treadmill-ல் நடக்க வைத்த சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. பொம்மைகளை நிற்க வைப்பதைவிட, பெண்கள் ஆடை அணிந்து RAMP-ல் நடப்பது போல் நடக்கும்போது, அந்த உடை எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்பதை காட்ட முடிவதாக நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இந்த யோசனையை சிலர் வரவேற்றாலும், சோதனைக்கு உட்படுத்தும் விலங்குகளை போல மாடல்களை நடத்துவதாக பலர் விமர்சித்து வருகின்றனர்.