சேந்தமங்கலம் - Senthamangalam

நைனாமலை பெருமாள் கோயிலுக்கான சாலை பணி ஆய்வு

நைனாமலை பெருமாள் கோயிலுக்கான சாலை பணி ஆய்வு

நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு செல்வதற்கான சாலை பணிகளை மாவட்ட ஆட்சியர் ச. உமா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். நாமக்கல் மற்றும் ராசிபுரம் ஒன்றியப் பகுதிகளில் தமிழக அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக, பிரசித்தி பெற்ற நைனாமலை பெருமாள் கோயிலுக்கு சாலைப் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தார்.  தார்சாலை பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, நைனாமலை அடிவார பகுதியில் உள்ள கடைகளில் நெகிழி பயன்பாடு இருப்பதை பார்வையிட்டு அவற்றை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத துணிப் பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கடை உரிமையாளர்களிடம் அறிவுறுத்தினார்.

வீடியோஸ்


జోగులాంబ గద్వాల జిల్లా