"BJP Free Recharge Yojana" என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடி 3 மாதங்களுக்கு இலவச செல்போன் ரீசார்ஜ் சேவை வழங்குவதாக செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், அதனுடன் லிங்க் ஒன்றும் உள்ளது. இந்நிலையில், இது முற்றிலும் போலியானது என்றும் ஆன்லைன் மோசடி என்றும் மத்திய அரசின் 'PIB Fact Check' தளம் தெரிவித்துள்ளது. மேலும், அந்த லிங்க்கை கிளிக் செய்து ஏமாற வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.