இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

60பார்த்தது
இந்து முன்னணி சாா்பில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் திருச்செங்கோடு தோ்நிலை அருகே ஒன்றிணைந்து 15 க்கும் மேற்பட்ட வாகனங்களில் சிலைகள் ஊா்வலமாக காவிரி ஆற்றுக்கு புறப்பட்டனா். இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவா் சண்முகசுந்தரம், தமிழ் மாநில காங்கிரஸ் நாமக்கல் மேற்கு மாவட்டத் தலைவா் செல்வகுமாா் ஆகியோா் கொடியைசைத்து ஊா்வலத்தைத் தொடங்கி வைத்தனா்.

இந்த சிலைகள் அனைத்தும் இறையமங்கலம் காவிரி ஆற்றுக்குக் கொண்டுவரப்பட்டு தீயணைப்புத் துறையினா் உதவியுடன் விசா்ஜனம் செய்யப்பட்டன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி