சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இன்று மதியம் தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளருக்கான சிறப்பு மருத்து முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா கலந்து கொண்டு சிறப்பித்தார். தூய்மை பணியாளருக்கு உடல் பரிசோதனை கண் பரிசோதனை இருதய பரிசோதனை ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் ஆகிய மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.