உத்திரப் பிரதேசத்தில், "பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா" பயனாளிகள் அனைவருக்கும் இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உரிய காலத்துக்குள் முடித்து, தீபாவளிக்கு முன் அனைத்து பயனாளிகளுக்கும் சென்றடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். தேர்தல் வாக்குறுதியின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கும் இதுபோன்று கிடைக்குமா? என்பதில் சந்தேகம் தான்.