பூர்வ ஜென்ம பாவம் போக்கும் நவபாஷாண திருத்தலம்.!

73பார்த்தது
பூர்வ ஜென்ம பாவம் போக்கும் நவபாஷாண திருத்தலம்.!
ராமநாதபுரம் தேவிப்பட்டினத்தில் கடலுக்குள் அமைந்திருக்கிறது நவபாஷாண திருக்கோயில். ராமாயண காலத்தில் ராமபிரானே இந்த கோயிலில் வழிபட்டுள்ளார். தேவிப்பட்டினம் கடற்கரையில் அமர்ந்து, மணலை ஒன்பது பிடி எடுத்து பிரதிஷ்டை செய்தார். அப்போது கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. அப்போது ராமன் தன் திருக்கரத்தை உயர்த்த கடல் அமைதியானது. அந்த ஒன்பது கற்கள் தற்போது நவகிரகங்களாக வழிபடப்படுகிறது. இங்கு வழிபடுபவர்களுக்கு பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும்.

தொடர்புடைய செய்தி