நாமக்கல் மாவட்டத்தில் எருமப்பட்டியில் பள்ளியில் உள்ள சமையல் அறை கதவில் மனித கழிவை பூசிய துரைமுருகன் (26) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில் பள்ளி சமையலர் மற்றும் சமையல் உதவியாளரிடம் முன்விரோத காரணமாக இச்செயலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.