நாமக்கல் அடுத்த பழையபாளையம் ஏரிக்கரையின் மேற்கு பகுதியில் சாலப்பாளையம் செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் கிடந்த கையுறைகள், லுங்கிகள் உள்ளிட்டவைகளை கைப்பற்றி இந்த இளைஞர் எந்த பகுதியைச் சேர்ந்தவர் அவரை யார் கொலை செய்து வீசி சென்றார்கள்? என்பது குறித்தும், எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்தும் நாமக்கல் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.