வரகூர் அரசு பள்ளியை கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு

63பார்த்தது
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே வரகூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு அதில் ஒரு மாணவன் உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று காலை வரகூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்குக் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாணவன் இறந்த வகுப்பறைக்குச் சென்று பார்வையிட்டனர்.

தொடர்புடைய செய்தி