பரமத்தி வேலூர் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று மாதாந்திர மன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் வார்டு உறுப்பினருக்கும் செயலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டு செயலாளர் வெளியேறினார். இது தொடர்பாக வார்டு உறுப்பினர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை தாசில்தார் பேச்சுவார்த்தை செய்ததில் உடன்பாடு ஏற்பட்டு காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெற்றனர்.