கும்பகோணம் - Kumbakonam

கும்பகோணம்: ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கக் கோரிக்கை

கும்பகோணம்: ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கக் கோரிக்கை

கும்பகோணம் பகுதியில் உள்ளூர் வாகனங்களும் அதிகளவில் இயக்கப்படுவதால் நகரப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனிடையே, கும்பகோணம் மாநகராட்சிக்குள்பட்ட அண்ணலக்குறாரம் அருகேயுள்ள மாத்திகேட் பகுதியிலும், தராசுரத்திலும் உள்ள ரயில்வே கேட் (கிராசிங்) பகுதிகளில் ரயில் வரும் நேரங்களில் கேட்டுகள் மூடப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் குறிப்பாக மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்வோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  கும்பகோணத்தில் இருந்து பட்டீஸ்வரம், வலங்கைமான், கொற்கை, ஆவூர், இடையிருப்பு, உத்தமதானபுரம், தேனாம்பட்டுகை, உடையாளூர் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்வோர் இந்த வழித்தடத்தில் உள்ள அண்ணலக்குறாரம் மாத்திகேட், தராசுரம் பகுதியிலுள்ள ரயில்வே கிராசிங்குகளில் ரயில் வரும் நேரத்தில் நீண்ட நேரம் நிற்க வேண்டியுள்ளதால் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.  தராசுரம் ரயில்வே கேட். இந்த 2 கிராசிங்களிலும் நாள்தோறும் சுமார் 40-க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை கேட் மூடப்படும்போது இருபுறமும் நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, இந்தப் பகுதிகளில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా