கும்பகோணத்தில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா பேட்டி.

85பார்த்தது
கும்பகோணம் அருகே தமிழக திருப்பதி என்று போற்றப்படும் ஒப்பிலியப்பன் கோயிலில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா தனது குடும்பத்தினருடன் வழிபாடு நடத்தினார் தொடர்ந்து கோயிலில் உள்ள உற்சவர் மூலவர் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார் அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசியலில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு என்னும் நிலைப்பாடு பாஜக முன்பிருந்தே செயல்படுத்தி வருகிறது.
2014 மற்றும் 2019 பாரதிய ஜனதாவிற்கு அறுதி பெரும்பான்மை இருந்த போதும் கூட்டணி கட்சிகளை ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்க வைத்துள்ளோம். யாருடன் சென்று ஓட்டு கேட்கிறோமோ அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும். திமுக எப்போதும் ஒருவர் படத்தை போட்டு பெயரைச் சொல்லி ஓட்டு கேட்கும் ஆனால் உள்ளே உட்கார அனுமதிக்காது. பாரதிய ஜனதா அது போல் இல்லை கூட்டணி கட்சியினரோடு ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதுதான் சரி. நடிப்பு என்று சொன்னால் சிவாஜி கணேசன் தான். அவரை யாராலும் நடிப்பில் மிஞ்ச முடியாது. ஆனால் அவரால் அரசியலில் பிரகாசிக்க முடியவில்லை. அவரைப்போல் விஜயகாந்த் வரை பலரும் அரசியலுக்கு வந்துள்ளனர் ஆனால் சினிமாவில் பிரகாசித்து விட்டு அரசியலில் சாதித்து விடலாம் என்று எண்ணுவது தவறு என்பதை மக்கள் பலமுறை உணர்த்தி இருக்கிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி