கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது எதனால் தீபாவளி திருநாள் கொண்டாடும் பொதுமக்கள் மிகவும் கஷ்டமடைந்தனர்.
மேலும் திடீரென மழை காரணமாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தீபாவளி பலகாரங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதற்கு சென்ற இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மழை நீரை கிழித்துக்கொண்டு செல்லும் அளவிற்கு கடும் மழை பெய்துள்ளது இதனால் கும்பகோணம் பகுதியில் தீபாவளி கொண்டாட்டம் மந்தம் அடைந்துள்ளது