தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அசூர் புறவழி்சசாலையில் உள்ள அரசு மதுபானக்கடை அருகே போதையில் 5 பேர்களை சரமாரியாக அரிவாளால் வெட்டி தப்பி ஓடியவர்களை தாலுகா போலீஸார் தேடி வருகின்றனர்.
கும்பகோணம் அருகே உள்ள அசூர் கீழத்தெருவில் வசிப்பவர் ராஜேஷ்(42), கூலி்ததொழிலாளி, ஞாயிற்றுக்கிழமை அசூர் புறவழிச்சாலையில் உள்ள அரசு மதுபானக்கடையில் மதுபாட்டில் வாங்க சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த 3 பேர் இவரை பார்த்து கிண்டல் செய்துள்ளனர், அவர்களை தட்டிகேட்டு தனது தம்பியை கைபேசியில் அழைத்துள்ளார். அப்போது சுமார் 15 க்கும் மேற்பட்டவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து புறவழிச்சாலை பாலம் கீழ் நின்றிருந்த ராஜேஷ், அவரது தம்பி சிவசங்கரன்(29), உறவினர் அய்யப்பன்(31) அருகில் இருந்த சதீஸ்(28), முல்லைவேந்தன்(27) ஆகியோர்களை அரிவாள்களால் சரமாரியாக வெட்டத்தொடங்கினர். இதைப்பார்த்த சாலையில் சென்றவர்கள் அலறி ஓடினர். தகவல் கிடைத்ததும் தாலுகா போலீஸார் காயம் பட்டவர்களை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்து தப்பி ஓடியவர்களை தேடிவருகின்றனர்.