

உசிலம்பட்டி: எம்புரான் படத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு சமீபத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் திரைப்படத்தில் முல்லை பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியும், அந்த காட்சியை பதிவு செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பிரச்சனையை தூண்டும் வண்ணம் உள்ள காட்சியை நீக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், உசிலம்பட்டி 58 கால்வாய் பாசன சங்கம் மற்றும் மக்கள் அதிகார அமைப்பு உள்ளிட்டவை இணைந்து இன்று (ஏப்ரல் 1) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து இப்படத்தின் இயக்குநர் பிரித்விராஜ், நடிகர் மோகன்லால், தயாரிப்பாளர் கோபலன் என மூவரின் புகைப்படங்களை செருப்பால் அடித்தும், கிழித்தும் எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார், கிழிக்கப்பட்ட புகைப்படங்களை பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.