திருப்பூர்: உடுமலை அருகே சடையபாளையத்தில் உள்ள தனியார் ஆலையில் பதப்படுத்தும் தொட்டியில் விழுந்து 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பப்பாளி பதப்படுத்தும் தொழிற்சாலையில் உள்ள தொட்டியில் தவறி விழுந்த ஒடிசாவைச் சேர்ந்த அருண் கொமாங்கோ, ரோகித் டிகால் என்ற இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, இரு இளைஞர்களும் பதப்படுத்தும் தொட்டியில் தவறி விழுந்து இறந்தனரா அல்லது விஷவாயு தாக்கி உயிரிழந்தனரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.