மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் திமுக செயலாளர் எஸ். ஓ. ஆர். தங்கப்பாண்டியன் ஏற்பாட்டில் கிராமிய கலைஞர்கள், கூலி தொழிலாளர்கள் என சுமார் 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவின் துவக்க விழாவாக 600க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார் மண்டப வளாகத்தில் நேற்று (மார்ச். 25) நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், உசிலம்பட்டி தொகுதி பொருப்பாளர் செல்லத்துரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
தொடர்ந்து வரும் 28 ஆம் தேதி சலவை மற்றும் மருத்துவர் சமுதாய தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், 30ஆம் தேதி ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என உசிலம்பட்டி திமுக நகர் கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.