உசிலம்பட்டி - Usilampatti

உசிலம்பட்டி: அதிமுக தான் எனது உயிர் மூச்சு.. சசிகலா பேச்சு

உசிலம்பட்டி: அதிமுக தான் எனது உயிர் மூச்சு.. சசிகலா பேச்சு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி மைதானத்தில் நேற்று (பிப். 24) இரவு அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு மாணவ, மாணவிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முன்னாள் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் சசிகலா பேசும் போது யாராக இருந்தாலும் தனது சுய விருப்பு வெறுப்பின்றி தன்னலத்துடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். இந்த இயக்கம் மீண்டும் எழுந்து செயல்பட வைப்பதே எனது லட்சியம், அதற்காக நான் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன். அதிமுக தான் எனது உயிர் மூச்சு என உசிலம்பட்டியில் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா பேசினார். முன்னதாக மாணவர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా