தமிழ்நாடு சட்டப்பேரவை கேள்விநேரத்தில் சுங்கச்சாவடிகள் & கட்டணம் தொடர்பாக கேள்விக்கு எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு அமைச்சர் ஏ.வ வேலு அளித்த பதில் வாகன ஓட்டிகளை அதிர வைத்துள்ளது. அதாவது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 77 சுங்கச்சாவடிகளில், 13 காலாவதி ஆகியுள்ளது. அதன் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை மத்திய அரசு மாற்றவில்லை. இதுகுறித்து கடிதம் எழுதியபோது, வசூல் நிறுத்தப்படாது என பதில் வந்துள்ளது.