நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே இரவு நேரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு கட்டிப்பிடித்து தூங்கிக் கொண்டிருந்த இளைஞர்களை தொந்தரவு செய்யாமல், கடைக்குள் இருந்து உணவுப் பொருட்களை காட்டு யானை சாப்பிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. நிம்மதியாக தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் கண்விழித்து யானையைக் கண்டதும் பதறியடித்து தப்பிச் சென்றனர். நீலகிரியில் இவ்வாறு அடிக்கடி யானைகள் வந்து செல்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.