திராவிடக் கட்சிகள் பலவீனம் அடைந்தால் கூட்டணி ஆட்சிக்கான குரல் வலுவாகும் என விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், "தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதற்கு காலம் இன்னும் கனியவில்லை. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என அமித் ஷா கூறியிருப்பது நகைச்சுவை. பாஜக கூட்டணியால் தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியாது என்பது அமித்ஷாவுக்கே தெரியும்" என்று பேட்டியளித்துள்ளார்.